NOW LOADING

மூன்று பேர் இரண்டு காதல் ஒரு கனவு (Moondru Per Irandu Kadhal Oru Kanavu)

Rated 5.00 out of 5 based on 6 customer ratings6 Ratings

மூன்று நண்பர்களையும் அவர்களது காதலையும், கனவையும் பற்றிய கதை. கார்த்திகேயினி , வசந்தி மற்றும் சேது சிவில் சர்வீசஸ் போட்டி தேர்வின் ஆர்வலர்கள். கார்த்திகேயினி ஏதிலிருந்து தொடர்ந்து தப்பிக்க முயல்கிறாள்? கார்த்திகேயினி , வசந்தி, சேது ஆகியோர் தங்களது கனவுகளை நினைவாக்கினார்களா?. இன்றைய தலைமுறை சந்திக்கும் சவால்களையும் அதை எதிர்கொள்ள வேண்டிய தைரியத்தையும் கார்த்திகேயினி வாயிலாக தெளிவாகவும், அழகாகவும் பதிவு செய்கிறது இப்புத்தகம்.

Add to BookShelf

Overview

Author : உமா மகேஸ்வரி

ISBN : 9789348712783

Genre : நாவல்

Dimension: 14×21.5cm

Publication Year: 2025

Edition : முதல்

Number of pages: 198

Language: தமிழ்

Publisher :எழிலினி பதிப்பகம்

Hardcover: Paper Back

 

BOOK DETAILS
  • Hardcover: NA
  • Publisher: NA
  • Language: NA
  • ISBN-10: NA
  • Dimensions: NA
Customer Reviews

Average customer rating

Rated 5.00 out of 5 based on 6 customer ratings6 Ratings
Add a review

Your email address will not be published. Required fields are marked *

  1. Emerald Publishers

    திரு.வைரமுத்து, ICLS, நிறுவனப் பதிவாளர், கோயம்புத்தூர்

    ஒரே நாளில் படித்து முடித்தேன். சில பகுதிகளைத் திரும்பத் திரும்பவும் படித்தேன். பொதுவாக நான் இரண்டு வகையான புதினங்களைப் படித்திருக்கிறேன். அடுத்தது என்ன நடக்கும் என்ற பரபரப்பை ஏற்படுத்தும் துப்பறியும் கதைகள், போர்க் கதைகள் என்று ஒரு வகை. மென்மையான உணர்வுகளை ஆழமாக நம்முள் கடத்தி முழு கதையையோ அல்லது சில பகுதிகளையோ திரும்பத் திரும்பப் படித்து ரசிக்க வைக்கும் கவிதை வகைக் கதைகள். இரண்டும் கலந்த ஒரு கலவையாக இந்தப் படைப்பு. கதைத் தலைவியாக வருபவரின் வாழ்க்கைப் போராட்டத்தையும், அதன் ஊடாகத் தனக்குள்ளே நடக்கும் உள்ளப் போராட்டத்தையும் அழகாக நமக்குக் கடத்தியிருக்கிறார். அப்படியான இரண்டு வகைப் போராட்டங்களும் காலத்தோடு சேர்ந்து எத்தகைய பரிணாமத்தை நோக்கி வளர்கின்றன என்பதையும் நம் கண் முன்னே நிகழ வைக்கிறார் ஆசிரியர். போராட்டக் கதையை அழகியலோடு படைக்கும் திறனைப் பெற்ற ஒரு நூலாசிரியரின் அழகிய படைப்பு.

  2. Emerald Publishers

    திரு.ஆ.ஸ்ரீராம்,
    வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம்.

    படிக்க படிக்க சலிக்காத படைப்பு … சுந்தர தமிழில் சூடான கதைகளத்தில் சுவாரஸ்யமான கதாபாத்திரங்களை கொண்டு கதையை சிறப்பாக கையாண்டு உள்ளார் கதாசிரியை. .. கதை சமூகத்தின் அநீதிகள், தனிமனிதனின் சிரிப்புக்கு பின் உள்ள வலி, ஏழ்மையின் வாட்டல், காதலின் கதகதப்பு, என பல பரிமாணங்களை தொட்டு சிறப்பாக ரசிக்கும் வகையில் பயணிக்கிறது.

  3. Emerald Publishers

    ஸ்ரீமதி. எஸ் பிரியா

    அழகிய நட்பு, காதல், கனவு மற்றும் பல்வேறு சூழல்களில் இருந்து ஐ.ஏ.எஸ். படிப்பதற்காக வரும் இளைய தலைமுறை இலட்சியப் பாதையை உள்ளடக்கிய கதை!

  4. Emerald Publishers

    ஸ்ரீமதி.மோஹனா

    வாழ்க்கையில் எப்பொழுதும் எந்த சூழ்நிலையிலும் மற்றவர்களை எதிர்பார்க்காமல், நம்மால் முடியும் என்ற தைரியம் எல்லா பெண்களுக்கும் வேண்டும்.இந்த கதையில் வரும் கார்த்திகேயினி போலவே…

  5. Emerald Publishers

    பி. பிரியங்கா, எம்.பி.ஏ.

    இந்த கதையிலிருந்து நான் தெரிந்து கொண்டவை தைரியமும், தன்னம்பிக்கையும்! பயத்தை தவிர்த்தால் எதையும் எளிதில் சாதிக்கலாம் என்பதினை தெரிந்து கொண்டேன். கார்த்திகேயனியின் கதாபாத்திரம் பெண்கள் சாதித்து காட்ட வேண்டும் என்பதையும் தாண்டி பெண்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதாக ஊக்குவிக்கிறது.

  6. Emerald Publishers

    ஷைனி ஏஞ்சல், வழக்கறிஞர்

    “ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற விரும்புவோருக்கு ஒரு மதிப்புமிக்க பொக்கிஷம் இந்தப் புத்தகம்! ஈடுபாட்டுடன் கூடிய கதைசொல்லலையும், விலைமதிப்பற்ற நுண்ணறிவுகளையும், நடைமுறை ஆலோசனைகளையும் சிறப்பாகக் கலக்கிறது. ஒவ்வொரு பக்கமும் மதிப்புமிக்க வாழ்க்கைப் பாடங்களைக் கற்பிக்கிறது. உங்கள் நம்பிக்கைகளுக்கு சவால் விடுகிறது! மேலும் தன்னம்பிக்கையைத் தூண்டுகிறது. யுபிஎஸ்சி பயணத்தில் பயணம் செய்யும் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம்!”

BOOKS BY

SHARE THIS BOOK

Registration

Forgotten Password?