Aavalathi

0 Ratings

ம.தொல்காப்பியன் ஓர் அயராத பயணி. பரந்த வாசகர். ஓயாது உரையாடும் திரண்ட நட்பு வட்டத்தை உடையவர். திராவிடக் கருத்தாளர், கலைச் சமூக சிந்தனையாளர், காட்சிமா (Cinema) இலக்கியக் கோட்பாட்டாளர். காட்சிமாவை ஓர் இலக்கிய வடிவமாகப் பார்ப்பதும் அதை மக்கள் இலக்கியமாகக் கொண்டாடுவதும் ம.தொல்காப்பியனின் தனித்தன்மையான இயல்பு! இதழ்களிலும், முகநூலிலும் காட்சிமா இலக்கியம் குறித்து இவர் எழுதி வரும் கட்டுரைகள் மூலம் பெரும் கவனத்தை பெற்றவர். சமூக வளர்ச்சி என்பது காட்சிமா இலக்கியம் குறித்த விழிப்புணர்ச்சியில்தான் இருக்கிறது என்று

Add to BookShelf

  • Genre:
  • Originally Published:
  • Hardcover:
    Paperback
  • Language:
    Tamil

Overview

ம.தொல்காப்பியன் ஓர் அயராத பயணி. பரந்த வாசகர். ஓயாது உரையாடும் திரண்ட நட்பு வட்டத்தை உடையவர். திராவிடக் கருத்தாளர், கலைச் சமூக சிந்தனையாளர், காட்சிமா (Cinema) இலக்கியக் கோட்பாட்டாளர். காட்சிமாவை ஓர் இலக்கிய வடிவமாகப் பார்ப்பதும் அதை மக்கள் இலக்கியமாகக் கொண்டாடுவதும் ம.தொல்காப்பியனின் தனித்தன்மையான இயல்பு! இதழ்களிலும், முகநூலிலும் காட்சிமா இலக்கியம் குறித்து இவர் எழுதி வரும் கட்டுரைகள் மூலம் பெரும் கவனத்தை பெற்றவர்.

சமூக வளர்ச்சி என்பது காட்சிமா இலக்கியம் குறித்த விழிப்புணர்ச்சியில்தான் இருக்கிறது என்று திடமாக நம்புபவர். நவீன உலகம் என்பது காட்சிமாவின் கொடை என்று பேசியும் எழுதியும் வருபவர். எந்த சமூகம் நல்ல காட்சிமாவை உருவாக்கும் திறனோடு இயங்குகிறதோ அந்தச் சமூகம்தான் நேர்மையான அரசியலையும் அரசியல் தலைவர்களையும் உருவாக்கும் வல்லமைக் கொண்டதாயிருக்கும் எனும் வாதத்திற்குச் சொந்தக்காரர்!

ஒரு கட்டுரையாளராக மட்டும் இல்லாமல் ஒரு காட்சிமா எழுத்தாளராக மாறியதோடு இப்போது எழுத்துக் கதைஞராகவும் உருவெடுத்து இருப்பவர். விரைவில் ஒரு காட்சிமா இயக்குநராகவும் அறியப்படவிருக்கிறார்!

காமத்தின் குறுக்கு வெட்டு தோற்றத்தில் சமுகத்தின் மனதை நுட்பமாகக் காட்ட விழையும் தொல்காப்பியன், காம உணர்ச்சியைத் தூண்டும் போர்னோ ரைட்டிங் என்கிற எழுத்தைக் கைக்கொள்ளாமல், காமம் எத்தனை முக்கியமானது, நுண் உணர்வு கொண்டது, அந்த ஆதார சக்தியை முழுமையாகச் சுவீகரிப்பது பற்றிய தேடலைத் தொடங்கு என்று சொல்ல, ‘எரோட்டிகா’ எழுத்து முறையைக் கையில் எடுத்துள்ளார்.

அமிர்தம் சூர்யா

(எழுத்தாளர் – பத்திரிக்கையாளர்)

BOOK DETAILS
  • Hardcover: Paperback
  • Publisher: எழிலினி பதிப்பகம்
  • Language: Tamil
  • ISBN-10: 9788193151426
  • Dimensions: 1/8 DEMY
Customer Reviews

SHARE THIS BOOK

Registration

Forgotten Password?