எனக்குப் பாட்டுப் பாடவும், கேட்கவும் பிடிக்கும். ஓவியங்கள் வரையவும், ரசிக்கவும் பிடிக்கும். நமது பாரத தேசியப் பண்பாடு, பாரம்பரியம் ரொம்பவும் பிடிக்கும். அதனை நம் தற்போதைய தலைமுறைக்கு கொண்டு செல்லவில்லையோ என்ற ஆதங்கம் உண்டு. மழை, மலை, அருவி, பறவைகள், பூக்கள் இவற்றை ரசிக்கும் மனம் இருக்கிறது. இன்றையசிறார்கள் இயற்கையை விட்டு விலகி செயற்கையில் (அலைபேசியில்) மூழ்கியவர்களாக இருப்பது மனவலி தருவதாக உள்ளது. இயற்கையைரசிக்க, காக்க அவர்களுக்குக் கற்பிற்பது அவசியம். இந்தியக் குடிமக்களாக, தமிழர்களாக இருப்பதில்
Author name : சந்திரா கனகசபாபதி
ISBN : 9788119106899
Size : 14×21.5cm
எனக்குப் பாட்டுப் பாடவும், கேட்கவும் பிடிக்கும். ஓவியங்கள் வரையவும், ரசிக்கவும் பிடிக்கும். நமது பாரத தேசியப் பண்பாடு, பாரம்பரியம் ரொம்பவும் பிடிக்கும். அதனை நம் தற்போதைய தலைமுறைக்கு கொண்டு செல்லவில்லையோ என்ற ஆதங்கம் உண்டு. மழை, மலை, அருவி, பறவைகள், பூக்கள் இவற்றை ரசிக்கும் மனம் இருக்கிறது. இன்றையசிறார்கள் இயற்கையை விட்டு விலகி செயற்கையில் (அலைபேசியில்) மூழ்கியவர்களாக இருப்பது மனவலி தருவதாக உள்ளது. இயற்கையைரசிக்க, காக்க அவர்களுக்குக் கற்பிற்பது அவசியம்.
இந்தியக் குடிமக்களாக, தமிழர்களாக இருப்பதில் பெருமை கொள்பவராக நம் சந்ததியர் வளர நம்மால் இயன்றதைச் செய்ய வேண்டும். உறவுகளைப் பேணவும் கற்பிக்கப்பட வேண்டும். எனவேதான் என் சிறுகதைகளில் இதனைக் கருவாக அமைக்கிறேன். மனிதாபிமானம், கற்றலின் பெருமை, நேர்மையின் உன்னதம், மதநல்லிணக்கம் இவை மையக்கருத்தாய் என் கதைகளில் பேசப்பட்டுள்ளது. வாசகர்கள் ஆதரவைக் கோரும் உங்கள் அபிமான எழுத்தாளர் சந்திரா.
Gallery Empty !