Theliwattai Joseph Kathaigal

0 Ratings

  தமிழ் இலக்கியப்பரப்பில் ஒரு தமிழ்ச் சமூகம் எந்த அளவு துயரங்களை, அடிமைவாழ்வின் கூறுகளைக் கொண்டியங்கியது என்பதை ஜோசப் அவர்களைப்போல கலாநேர்த்தியுடன் சித்திரித்த பெரும் எழுத்தாளன் யாருமில்லை. மனித ஜீவிகளாகவே கருதப்படாத ஒரு சனக்கூட்டத்தின் தீனக்குரலை தீவிர மூர்ச்சனையோடு எழுத்தியக்கத்தில் பதிவு செய்த பெரும் இலக்கிய வியக்தி அவர். மலையக சமுதாயத்தின் நிதர்சனத்தை, அதன் வெம்மையின் தவிப்பை, சிறுமையின் இழிவை, சுரண்டலின் சூக்குமத்தை, இனவாதத்தின் நச்சுக்கொடுக்குகளை, உணர்வுகளின் இடத்தை தந்திரமும் வக்கிரமும் அபகரித்து விட்ட அவலத்தை தனது

Add to BookShelf

  • Genre:
  • Originally Published:
  • Hardcover:
    paper back
  • Language:
    தமிழ்

Overview

 

தமிழ் இலக்கியப்பரப்பில் ஒரு தமிழ்ச் சமூகம் எந்த அளவு துயரங்களை, அடிமைவாழ்வின் கூறுகளைக் கொண்டியங்கியது என்பதை ஜோசப் அவர்களைப்போல கலாநேர்த்தியுடன் சித்திரித்த பெரும் எழுத்தாளன் யாருமில்லை. மனித ஜீவிகளாகவே கருதப்படாத ஒரு சனக்கூட்டத்தின் தீனக்குரலை தீவிர மூர்ச்சனையோடு எழுத்தியக்கத்தில் பதிவு செய்த பெரும் இலக்கிய வியக்தி அவர். மலையக சமுதாயத்தின் நிதர்சனத்தை, அதன் வெம்மையின் தவிப்பை, சிறுமையின் இழிவை, சுரண்டலின் சூக்குமத்தை, இனவாதத்தின் நச்சுக்கொடுக்குகளை, உணர்வுகளின் இடத்தை தந்திரமும் வக்கிரமும் அபகரித்து விட்ட அவலத்தை தனது கதைகளிலே அவர் மீட்டியிருக்கிறார். சிறுமை கண்டு பொங்கிய கலகக்காரனின் எழுத்துக்களாக அவரது கதைகள் சிறப்புப்பெறுகின்றன.

தான் வாழ்ந்த காலத்தின் கோலங்களை, துயரங்களை, சிறுமைகளை, இன மேலாண்மையின் கொடிய சொரூபத்தை, மனிதன் அற்பஜீவியாக மாறிப்போன சமூக அவலத்தை எழுத்தில் கலாபூர்வமாகச் சித்திரித்த மகத்தான எழுத்தாளராக தெளிவத்தை ஜோசப் வரலாற்றில் என்றும் ஒளிர்வார்.

மு. நித்தியானந்தன்

‘இலக்கியத்துக்குக் கோபம் கூடாது. இயல்பு மனிதர்களின் சித்திரமாக இருக்கவேண்டும். அது தெளிவத்தை ஜோசப்பின் படைப்புகளில் காணப்படுகிறது. ‘கூனல்’ என்று ஒரு சிறுகதை. உலகப் பெருமைமிக்க சிறுகதையாகவே அதை உணர்ந்தேன்.’

இந்திரா பார்த்தசாரதி

BOOK DETAILS
  • Hardcover: paper back
  • Publisher: எழிலினி பதிப்பகம்
  • Language: தமிழ்
  • ISBN-10: 9789392224423
  • Dimensions: 15.6X23.4 CM
Customer Reviews

Registration

Forgotten Password?