NOW LOADING

ஜீவநிலா (Jeevanila)

0 Ratings

ஒரு தேசத்தின் வரலாற்று நிகழ்வுகளை அடுத்த சந்ததிக்கு கடத்திச் செல்பவர்கள்தான் எழுத்தாளர்கள். அந்த வகையில் ஈழத்து எழுத்தாளராகவும், பாடலாசிரியராகவும், கவிஞராகவும் அவதரித்திருக்கும் பிரபா அன்பு அவர்கள் பல படைப்புகளை புத்தக வடிவிலும் சமூக வலைத்தளமூடாகவும் எமக்கு (வாசகர்களுக்கு) தந்துகொண்டிருக்கிறார். குறிப்பாக, ஈழத்தில் நடைபெற்ற போர் பற்றியும் அங்குள்ள வாழ்வியல் நிலையையும் அந்நிலத்தில் வாழ்ந்துவரும் மக்கள் அங்கு எதிர்கொள்ளும் துயரங்கள் பற்றியும் இவர் எழுதிவரும் படைப்புகள் அனைத்துமே மிக அருமை. இவரது எழுத்துக்கள் எம் மனநிலையை அந்த சூழ்நிலைக்கு

Add to BookShelf

Overview

Author name : பிரபா அன்பு

ISBN : 9789387681996

Size : 13x19cm

ஒரு தேசத்தின் வரலாற்று நிகழ்வுகளை அடுத்த சந்ததிக்கு கடத்திச் செல்பவர்கள்தான் எழுத்தாளர்கள். அந்த வகையில் ஈழத்து எழுத்தாளராகவும், பாடலாசிரியராகவும், கவிஞராகவும் அவதரித்திருக்கும் பிரபா அன்பு அவர்கள் பல படைப்புகளை புத்தக வடிவிலும் சமூக வலைத்தளமூடாகவும் எமக்கு (வாசகர்களுக்கு) தந்துகொண்டிருக்கிறார். குறிப்பாக, ஈழத்தில் நடைபெற்ற போர் பற்றியும் அங்குள்ள வாழ்வியல் நிலையையும் அந்நிலத்தில் வாழ்ந்துவரும் மக்கள் அங்கு எதிர்கொள்ளும் துயரங்கள் பற்றியும் இவர் எழுதிவரும் படைப்புகள் அனைத்துமே மிக அருமை. இவரது எழுத்துக்கள் எம் மனநிலையை அந்த சூழ்நிலைக்கு கொண்டு சென்றுவிடுகிறது. இவ்வாறு அமைந்துள்ள இவரது எழுத்தாற்றல் மிக அபாரம். அத்தோடு இவரது கவிதை வரிகள் ஆழ்மனதையும் வருடும் ஆற்றல் உடையவை, உணர்வுகளைத் தூண்டக்கூடியவை. ஒரு மனிதனிற்கு தன் சமூகம் சார்ந்த சிந்தனை, நலன் அக்கறை மிக மிக அவசியமான ஒன்று, அந்த வகையில், இவர், சமூகசேவகியாகவும் தன்மக்களுக்கான பணியை ஆற்றிவருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக யுத்தத்தால் பாதிக்கப்பட்டு இன்றளவும் மீளமுடியாது தவிக்கும் மக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை பெற்றுக்கொடுத்துவருகிறார் என்பது மிகப் பாராட்டவேண்டிய விடயமாகும். ஈழத்து எழுதாளராய் கவிஞராய்,பாடலாசிரியராய், சமூகஆர்வலராய் இவரது பணி மென்மேலும் தொடர வேண்டும், இவர் சிகரம் தொடவேண்டும். பிரபா அன்பு அவர்களின் பணி சிறப்பாய் அமைய என் பிரார்த்தனைகளும் வாழ்த்துகளும்..!

நேசமுடன் தாட்சாயினி மோகன்

BOOK DETAILS
  • Hardcover: paper back
  • Publisher: எழிலினி பதிப்பகம்
  • Language: தமிழ்
  • ISBN-10: 9789387681996
  • Dimensions: 13X19cm
Customer Reviews

Registration

Forgotten Password?