"ஒரு காவியத்தின் கடைசிப்பொழுது" எனும் காவியத்தை தீட்டிய கரங்கள் உதிர்த்த மைத்துளிகளில் காய்ந்த குருதியின் வாடை வீசும். அதை தொட்டுப் பாருங்கள் புரையோடிய புண்ணின் வலி தெரியும். கண்ணில் ஒற்றிப் பாருங்கள்,புறநானூற்றைப் புறந்தள்ளிய வீரத்தை உணர்த்தும். தேசவிடுதலைக்காய் பாச உறவுகளைப் பிரிந்த அந்த பட்சிகள், தோழமையோடு கொண்ட நேசமும் பாசமும் எழுத்துக்களில் மிளிரும். படிக்கும்போது, அவர்கள் எங்கள் மரபோடு உரையாடிய வார்த்தைகள் அன்பாய் வருடும். களத்திலே காக்கிக்குள் புதைந்திருக்கும் அந்த குட்டி உள்ளங்களின் குறும்புகள் சொல்லும்