நேரமில்லாதவரின் எழுத்து எழுத
கவிதை எழுதுகிறவர்கள் 503 எழுதும் போது கட்டிப்பிடித்துக்கொள்ளும் கவித்துவத்தை வெட்டி விடாமல் தட்டிக்கொடுத்து கதையைபி பாதுகாப்பது பெரும் சங்கடமான விசயம், இதை மிகத் தெளிவாகச் செய்திருக்கிறா? நயினார். மிசையும் வளர்த்திருக்கிறார் கூமும் சாப்பிட்டிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.
“அந்த இரயில் நிலையத்தின் சோம்பலை அவசரமாக உருவிர் போட்டது வந்து நின்ற இரயில்
வேடிக்கை மனிதன் என்கிற தொகுப்பின் முதல் கதையின்
இரண்டாவது வாக்கியமே நான் மேற்கூறியதற்குச் சான்றாகும். சில கதைகளைத்
தவிர பெரும்பாலான கதைகள் அளவில் சிறிதாக இருப்பது வாசிப்பதற்கான
தூண்டுதலை ஏற்படுத்துகின்றன. ஒவ்வொரு கதையை வாசிக்கும் போதும்,
போதும் பிறகு வாசிப்போம் என மூடி வைக்கத்தான் தோன்றவில்லை. எளிய
நடையே இத்தொகுப்பின் பலம். எளிய நடையை இவர் எடுத்துக்கொண்டதால்
தான் சுலபமாக வலியைக் கடத்த முடிந்திருக்கிறது.
எழுத்தாளர் காரி ஒட்டும் தொழில்காரர் என்பதால், நடந்துசென்று மக்கள் வாழ்வை பார்ப்பவர்களைவிட சற்று வேகமாகப் பார்க்கிறார். இப்படி வேகமாகப் பார்ப்பதில் என்ன லாபம் என்றால் நாம் ஆயிரம் மனிதர்களைப் பார்ப்பதற்குள் இவர் லட்சம் மனிதர்களைப் பார்த்துவிடுகிறார், ஆனால் இப்படி ஒரு கடுமையான பணியைச் செய்துகொண்டு கவிதையும் கதையும் எழுதுதல் என்பது சாத்தியமற்றது, சாத்தியமானதிற்கு மனிதர்களின் மீது இவர் வைத்திருக்கும் அன்பே காரணம். இப்படி எழுத நேரமில்லாதவரின் எழுத்துக்குத் தான் வலிமை கூடுதலாக இருக்கிறது என்பதை இவரி மூலம் அறிகிறேன்.
திண்ணையில் போரித்திப் படுத்துக்கொண்டு கதை எழுதுகிறவர்களின் எழுது பொருளுக்கும் இவரைப் போன்ற பயணிகளின் எழுதுபொருளுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. மனித வாழ்வின் வெக்கையை விசாரணை செய்யும் எழுத்தாளராக, நகரத்தின் பரபரப்பை நம் முன் நிறுத்தும் எழுத்தாளராக, சனங்களின் உளவியலை எழுதும் எழுக்காளராக’ திருப்பத்தில் சந்திக்கலாம்’ நூலின் மூலம் அறிமுகமாகும் எழுத்தாளர் நயினார்? அவர்களை வரவேற்போம் வாழ்த்துவோம்1
நிறைந்த அன்புடன்,
ஏகாதசி
திரைப்பட இயக்குநர் பாடலாசிரியர்
தமுஎகச மாநிலத் துணைச் செயலாளரி